குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் பார்த்துக்கொள்வது எப்படி? 🤒
குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தாலே பெரும்பாலான பெற்றோர்கள் உடனே பயந்துடுறாங்க. ஆனால் காய்ச்சல்னு சொல்றது ஒரு வியாதியே கிடையாது. நம்ம உடம்புல ஏதாவது ஒரு இன்பெக்ஷனோ அல்லது இன்ஃப்ளமேஷனோ நடந்துச்சுன்னா, அதனுடைய ஒரு அறிகுறிதான் காய்ச்சல்.
நம்ம ஊர்ல நிறைய பேர் குழந்தையோட கை சுடுது, கால் சுடுது, தலை சுடுது என்று சொல்லி காய்ச்சல் வந்திருச்சுன்னு நினைச்சு ஹாஸ்பிடலுக்கு வருவாங்க.
குறிப்பா அஞ்சு வயசு வரைக்கும் குழந்தைகளுக்கு தலை கொஞ்சம் சூடாதான் இருக்கும். உடம்புல மற்ற பகுதிகளை கம்பேர் பண்ணும்போது, குழந்தைகளுடைய தலை உடம்புலயே பெரிய பகுதியாக இ
ருக்கும். அந்த பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமா போறதுனால தலை கொஞ்சம் சூடா இருக்கும்.
அதை மட்டும் வச்சு காய்ச்சல்னு சொல்லக்கூடாது.
அதே மாதிரி அஞ்சு வயசு வரைக்கும் குழந்தைகளுடைய மூளை வளர்ச்சி அதிகமா இருக்கறதுனாலயும் தலை கொஞ்சம் சூடா இருக்கலாம்.
அதனால குழந்தைக்கு உண்மையிலேயே காய்ச்சல் இருக்கா இல்லையா என்பதை தெரிஞ்சுக்க ரொம்ப ஈஸியான வழி ஒரு தெர்மாமீட்டர் வாங்கி வச்சுக்கிட்டு டெம்பரேச்சரை பார்த்துக்கறதுதான்.
குழந்தைகளுக்கு டெம்பரேச்சர் எப்படி பார்க்கணும்?
ஜெனரலா அஞ்சு வயசு வரைக்கும் குழந்தைகளுக்கு வாயில டெம்பரேச்சர் பார்க்க முடியாது. அதனால அண்டர் ஆர்ம், அதாவது அக்குல்ல தான் டெம்பரேச்சர் பார்க்கணும்.
டிஜிட்டல் தெர்மாமீட்டர் இப்போ ஹாஸ்பிடல்லயும் வீட்லயும் பயன்படுத்துறோம். மெர்க்குரி தெர்மாமீட்டரை இப்போ பயன்படுத்துறது இல்லை. டிஜிட்டல் தெர்மாமீட்டர்தான் சேஃபானது.
காய்ச்சலுக்கு பேராசிட்டமால் கொடுக்கும்போது கவனம் தேவை
மருந்து கொடுக்கறதுலயும் நிறைய குழப்பங்கள் இருக்கு.
காய்ச்சலுக்கு பேராசிட்டமால்தான் ரொம்ப சேஃபஸ்ட் ட்ரக். இது ட்ராப்ஸ், சிரப், மாத்திரைன்னு மூணு விதமா வருது.
ட்ராப்ஸ்னா அந்த மருந்து குப்பியில ஒரு ஃபில்லர் இருக்கும். அந்த ஃபில்லர் வச்சுத்தான் எடுத்து கொடுக்கணும்.
அடுத்து சிரப் இருக்கும். சிரப்பை மூடியில ஊத்திக் கொடுக்கிறோம்.
அடுத்து மாத்திரை.
இங்கதான் பெற்றோர்கள் ரொம்ப கவனமா இருக்கணும். ஏன்னா ட்ராப்ஸ்லயும், சிரப்புலயும் வெவ்வேறு ஸ்ட்ரென்த் இருக்கும்.
உதாரணத்துக்கு, சில ட்ராப்ஸ்ல 1 ml-க்கு 100 mg பேராசிட்டமால் இருக்கும். சிலவற்றுல 1 ml-க்கு 150 mg பேராசிட்டமால் இருக்கும்.
அதே மாதிரி சிரப்புல 5 ml-க்கு 250 mg, 165 mg, 500 mg அப்படின்னு வெவ்வேறு ஸ்ட்ரென்த்ல வருது.
மாத்திரைகள்லயும் 250 mg, 500 mg, 650 mgன்னு வெவ்வேறு ஸ்ட்ரென்த்ல இருக்கு.
அதனால குழந்தைக்கு எவ்வளவு பேராசிட்டமால் கொடுக்கணும்னு வயசை மட்டும் வச்சு முடிவு பண்ணக்கூடாது. குழந்தையோட வெயிட்டை வச்சுதான் டோஸ் முடிவு பண்ணணும்.
ட்ராப்ஸையும் சிரப்பையும் மாற்றிக் கொடுக்கக்கூடாது
ஒரு வயசு குழந்தைன்னு எடுத்துக்கிட்டோம்னா, ஒரு குழந்தை 8 கிலோ இருக்கலாம். இன்னொரு குழந்தை 10 கிலோ இருக்கலாம். இன்னொரு குழந்தை 12 கிலோ இருக்கலாம்.
வயசு மூணு குழந்தைக்கும் ஒன்னுதான். ஆனா எடை வேற வேற.
அதனால மருந்தோட டோஸும் எடையைப் பொறுத்து மாறும்.
அதே மாதிரி ட்ராப்ஸையும் சிரப்பையும் மாற்றிக் கொடுக்கக்கூடாது.
ஏன்னா ட்ராப்ஸ்ல கம்மியான mlலயே அதிக ஸ்ட்ரென்த் இருக்கலாம். சிரப்புல அதே அளவு பேராசிட்டமால் இருக்க வேற அளவு ml தேவைப்படலாம்.
அதனால டாக்டர் சொன்ன மருந்தின் பெயர், ஸ்ட்ரென்த், அளவு இதையெல்லாம் சரியா பார்த்துத்தான் குழந்தைக்கு மருந்து கொடுக்கணும்.
ட்ராப்ஸுக்கு பதிலா சிரப்பையோ, சிரப்புக்கு பதிலா ட்ராப்ஸையோ ஒரே அளவுல கொடுக்கக்கூடாது.
தவறான அளவு அதிகமா போயிட்டா குழந்தைகளுக்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கு.
அதனால பேராசிட்டமால் கொடுக்கும்போது பெற்றோர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்.
காய்ச்சல் வந்ததும் உடனே மருந்து கொடுக்கணுமா?
காய்ச்சல் வந்த உடனே மருந்து கொடுக்கணும்னு அவசியம் கிடையாது.
காய்ச்சலுக்காக மருந்து கொடுக்கும்போது டாக்டர் சொல்லியிருக்கும் அளவு மற்றும் இடைவெளியை கண்டிப்பா பின்பற்றணும்.
உதாரணத்துக்கு ஒரு நேரம் மருந்து கொடுத்துட்டு, இடையில திரும்ப காய்ச்சல் வந்துச்சுன்னு உடனே அடுத்த டோஸ் கொடுக்கக்கூடாது.
மருந்துக்கு இடையில காய்ச்சல் வந்துச்சுன்னா, குழந்தைக்கு வசதியா இருக்குற மாதிரி ஸ்பாஞ்சிங் செய்யலாம்.
நார்மலான டெம்பரேச்சர்ல இருக்குற தண்ணிய எடுத்து காட்டன் துணியால குழந்தையோட உட்பகுதியான அக்குல், தொடை போன்ற பகுதிகளை துடைச்சு விடலாம்.
சில குழந்தைகளுக்கு ஸ்பாஞ்சிங் பிடிக்காம இருக்கலாம். அதனால குழந்தையோட நிலையை பார்த்துத்தான் செய்யணும்.
எப்போது குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்?
பொதுவா காய்ச்சல் மட்டும் இருக்குன்னா எல்லா நேரமும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஆனா காய்ச்சலோட சேர்த்து குழந்தை எப்பவும் போல இல்லாம துவண்டு போயிடுறாங்கன்னா கவனிக்கணும்.
இருமல், சளி அதிகமா இருக்கு, மூச்சு திணறல் இருக்கு, கை குழந்தைன்னா பால் குடிக்க மாட்டேங்குறாங்க, யூரின் போற அளவு கம்மி ஆயிடுச்சு, வாந்தி இருக்கு, வயிற்றுப்போக்கு இருக்கு, வயிறு வலி இருக்கு, சிறுநீர் கழிக்க சிரமப்படுறாங்க, நடக்க முடியலன்னு இருந்தா உடனே டாக்டர்ட்ட கூட்டிட்டு போய் காட்டணும்.
காய்ச்சல் வந்த குழந்தைக்கு என்ன ஆகாரம் கொடுக்கலாம்?
காய்ச்சல் வரும்போது உடம்புல நிறைய மாற்றங்கள் நடக்கும். அந்த நேரத்துல குழந்தைகளுக்கு நீர்ச்சத்து முக்கியம்.
உங்க குழந்தை வீட்ல சமைக்கிற சாப்பாடு எல்லாமே விரும்பி சாப்பிடுவாங்கன்னா அதையே கொடுக்கலாம்.
ஆனா காய்ச்சல் வந்ததும் குழந்தை சாப்பிடவே மாட்டேங்குது, சோர்வா படுத்துக்கிட்டே இருக்கு என்றால் நீர் ஆகாரங்கள் நிறைய கொடுக்கலாம்.
காய்ச்சல் வரும்போது வியர்வை மூலமா நீர்ச்சத்து குறையலாம். அதே மாதிரி காய்ச்சலுக்கான மருந்து கொடுத்த பிறகு வியர்வை வந்தாலும் நீர்ச்சத்து தேவைப்படும்.
அதனால இளநீர், நீர்மோர், பழச்சாறு, அரிசி கஞ்சி போன்ற நீர் ஆகாரங்களை கொடுக்கலாம்.
பழங்களையும் கொடுக்கலாம். முக்கியமா வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களை கொடுக்கலாம்.
இளநீர் கொடுத்தா சளி பிடிச்சிடும்னு சில பேர் நினைப்பாங்க. ஆனா இளநீர் கொடுக்கக்கூடாதுன்னு அவசியம் இல்லை. இளநீர்ல பொட்டாசியம் மற்றும் தாது உப்புகள் இருப்பதால உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்க உதவும்.
குழந்தைக்கு பிடிச்சிருந்தா இளநீரை கொடுக்கலாம்.
காய்ச்சல் வந்தால் வலிப்பு வருமா?
ஜுரம் வந்தா எல்லா குழந்தைகளுக்கும் வலிப்பு வராது.
ஏற்கனவே வீட்டுல வேற குழந்தைகளுக்கோ அல்லது முதல் குழந்தைக்கோ ஜுரம் வந்து வலிப்பு வந்திருந்துச்சுன்னா, சில குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் வலிப்பு வர வாய்ப்பு இருக்கலாம்.
இதுபற்றி குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
காய்ச்சல் வந்தால் குழந்தையை குளிக்க வைக்கலாமா?
கண்டிப்பாக காய்ச்சல் வந்தாலும் குழந்தையை குளிக்க வைக்கலாம்.
காய்ச்சல் அடிச்சு வேர்க்கும்போது உடம்பு கசகசப்பா இருக்கும். குழந்தையும் டயர்டா இருக்கும்.
அதனால தலை குளிக்க வைக்காம மேல மட்டும் குளிக்க வச்சாலும் குழந்தைக்கு புத்துணர்ச்சியா இருக்கும்.
முக்கியமாக நினைவில் வைக்க வேண்டியது
குழந்தைக்கு காய்ச்சல் வந்தவுடன் பதற வேண்டாம்.
முதல்ல தெர்மாமீட்டர் வச்சு டெம்பரேச்சரை சரியா பார்த்துக்கோங்க.
மருந்து கொடுக்கும்போது குழந்தையோட எடைக்கு ஏற்ற சரியான டோஸை மருத்துவரிடம் தெரிஞ்சுக்கிட்டு கொடுக்கணும்.
ட்ராப்ஸ், சிரப் இரண்டையும் ஒரே அளவுல மாற்றி கொடுக்கக்கூடாது.
காய்ச்சலோட சேர்த்து குழந்தைக்கு மூச்சுத்திணறல், அதிக வாந்தி, வயிற்றுப்போக்கு, பால் குடிக்காம இருப்பது, யூரின் குறைவது, அதிக சோர்வு போன்ற வேறு பிரச்சனைகள் இருந்தால் உடனே டாக்டரிடம் காட்டணும்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் பேராசிட்டமால் எப்படி கொடுக்கணும், எவ்வளவு கொடுக்கணும் என்பதுபற்றி இந்த தகவல்கள் பெற்றோர்களுக்கு ஒரு பொதுவான புரிதலை கொடுக்க உதவும்.
மருந்தின் சரியான அளவு குழந்தையின் எடை, மருந்தின் ஸ்ட்ரென்த் மற்றும் குழந்தையின் உடல்நிலையைப் பொறுத்து மாறக்கூடும். அதனால் குறிப்பிட்ட டோஸுக்கு குழந்தைகள் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவது முக்கியம்.
நன்றி. வணக்கம்.

0 Comments