இரவில் நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்

 

         இரவில் நல்ல தூக்கம் வர என்ன

 செய்ய வேண்டும்


நீங்கள் இரவு தூங்கப் போவதற்கு முன்னால், சில விஷயங்களை கவனிக்கத் தேவையாக இருக்கிறது. நீங்கள் மாமிசமோ, இல்லை வேறுவிதமான உணவோ சாப்பிட்டு இருந்தால், தூங்கப் போவதற்கு மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் முன்னாலேயே உண்பது சிறந்தது. அப்போது தான் உறங்குவதற்கு முன்னால் ஜீரணமாகியிருக்கும். உறங்குவதற்கு முன்னால் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு உறங்கப்போகலாம். இதுவே உங்கள் தூக்கத்தைப் பராமரிக்கும்.




நீங்கள் செய்யக்கூடிய ஒரு எளிய செயல், குளிப்பது. தூங்குவதற்கு முன்னால் குளிப்பது மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். குளிரான தட்பவெட்பத்தில் பச்சைத்தண்ணீரில் குளிப்பது சிரமமாக இருந்தால், வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். இரவு நேரத்தில் சுடுநீரில் குளிக்கவேண்டாம், வெதுவெதுப்பான நீரில் குளித்தால், அது உங்களை விழிப்பாக்கும். அதனால் பிரச்சனை ஒன்றும் இல்லை. நீங்கள் 15 - 20 நிமிடங்கள் அல்லது அரை மணிநேரம் தாமதமாக தூங்கலாம், ஆனால் நன்றாக தூங்குவீர்கள். ஏனென்றால், இது சில விஷயங்களை நீக்கிவிடும். நீங்கள் குளிக்கும்போது தோலில் இருக்கும் அழுக்கை மட்டும் எடுக்கவில்லை. நீங்கள் இதை கவனித்திருக்கிறீர்களா? நீங்கள் மிகவும் இறுக்கமாக அல்லது பதற்றமாக இருந்தீர்களானால், குளித்துவிட்டு வெளியே வந்தால், ஏதோ பெரிய சுமை நீங்கியது போல இருக்கும். இதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அதனால் இது தோலை கழுவுவது பற்றி மட்டுமில்லை, உங்கள் உடல் மேல் தண்ணீர் ஓடுகின்றபோது, நிறைய விஷயங்கள் நடக்கின்றது.

காலையில் பிராணயாமம் அல்லது ஆழ்ந்த மூச்சுப்பயிற்சியுடன் யோகாவின் வழக்கமான பயிற்சியும் உதவுகிறது. இது தூக்கத்தை மேம்படுத்த செய்கிறது.

மனதையும் உடலையும் அமைதிப்படுத்த தூங்குவதற்கு முன் அமைதியான சூழலை உருவாக்குவது அவசியம்.

தூங்குவதற்கு 2 அல்லது 3 மணி நேரம் முன்பிருந்தே மின்னணு சாதனங்களிலிருந்து விலகி இருங்கள். இது கடுமையாக உங்கள் மனதையும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும் ஆழ்ந்த தூக்கத்தை தொல்லை செய்யும்.

தூங்கும் அறையை வெளிச்சமில்லாமல் வைத்திருங்கள். அமைதியான சூழலில் தூக்கம் நிம்மதியாக வரக்கூடும்.

                        


​நல்ல தூக்கத்துக்கு ஆயுர்வேதம் சொல்லும் குறிப்புகள்


 


1.)  இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வல்லாரை மற்றும் அஸ்வகந்தா பொடியை சேர்க்கவும். பிறகு அந்த நீரை கொதிக்க வைத்து குடிக்கலாம்.
2.) தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் அதிமதுரப்பொடி குளிர்ந்த பாலுடன் குடிக்கவும். வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.
3.) பாதாம், ரோஜா, மல்லிகை போன்ற நறுமண அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்தி முழு உடல் மசாஜ் செய்யலாம் தேவையெனில் லாவெண்டர் மற்றும் சந்தனம் சேர்க்கலாம். நீராவி குளியலும் தூக்கத்தை உண்டாக்கும்.
4.) ஒரு கப் பாலில் கால் கப் தண்ணீர், 1 பல் பூண்டு சேர்த்து கலக்கவும். இது நன்றாக கொதிக்க வைத்து குடிக்கவும். செர்ரிப்பழங்கள் நல்ல தூக்கத்தை தூண்ட செய்கிறது.
5.) இரண்டு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை ஜாதிக்காயுடன் தக்காளி சாற்றை எடுத்துகொள்ளலாம். தினமும் மதிய நேரத்தில் 4 அல்லது 5 மணி வாக்கில் இதை எடுத்துகொள்ளலாம்.
6.) பால் மற்றும் தேன் கலவையானது தூக்கத்தை தூண்டுவதற்கு சிறந்தது. நீண்ட காலமாக இது நடைமுறையில் இருக்கும் பழக்கமும் கூட.
7.) இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நிகோடின் , காஃபைன், மது பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும்.
8.)இரவில் இலேசான உணவை தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு எடுத்துகொள்ள வேண்டும்.


Post a Comment

0 Comments