தூக்கத்தில் விந்து வெளியேற்றம்?
இத மட்டும் அதிகம் சாப்பிடாதீங்க!
தூக்கத்தில் விந்து வெளியேறுகிறதா? அதை சரி செய்வதற்கு என்னென்ன சாப்பிட கூடாது, அது எந்த அளவிற்கு உங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது என்பதை மருத்துவர் விரிவாக விளக்கியுள்ளார்.
நிறைய ஆண்கள் எந்த நாட்களில் எல்லாம் லெமன் ஜூஸ் குடிக்கிறார்களோ அன்றைக்கு இரவில் விந்து வெளியற்றம் இருப்பதாக கூறியுள்ளார்கள்.
அதே நேரத்தில் கோதுமை சார்ந்த உணவுகளை தவிர்த்தால், இதற்க்கு முன்னாடி மாதத்தில் 15 நாட்கள் விந்து வெளியேற்றம் இருந்திருந்தால் இப்போது வாரத்தில் ஒரு முறை த இருக்கிறது என்றும் கூறியுள்ளார்கள்.
மஞ்சள், குறிப்பாக அதன் செயலில் உள்ள கலவை குர்குமின், விந்து தரம் மற்றும் ஆண் கருவுறுதலுக்கான சாத்தியமான நன்மைகளைக் காட்டுகிறது, இதில் விந்தணு இயக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்தல் ஆகியவை அடங்கும்,
ஆனால் அது அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் பொது ஆண்களுக்கு மேல் ஹோர்மோன் குறைந்து வித்துக்கள் வெளியேற்றம் ஏற்படும்.
அதனால் லெமன் ஜூஸ், கோதுமை மற்றும் கோதுமை சார்ந்த பொருட்கள் மற்றும் மஞ்சள், இவை மூன்றையும் அளவாக ஆண்கள் எடுத்து கொண்டால் நல்லது.
இல்லையென்றால் அவர்களின் விந்துக்களின் அளவும், தரமும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது
சித்த மருத்துவம்:
தண்ணீர்விட்டான் கிழங்குச் சூரணம் 1தேகரண்டி,தினமிருவேளை,200மிலி பாலுடன் கொள்ள ஆண்மை பெருகும்
1கிராம் தாமரைவிதையை அரைத்து.பாலில் கலந்து தினமிருவேளை சாப்பிட்டு வர தாதுபலம் பெறும்
நெருஞ்சில் விதைகளை பாலிலவித்து,பொடித்து காலைமாலை அரை தேகரண்டி பாலில் கலந்து பருகிவர ஆண்மை பெருகும்
துளசி இலையை குறிப்பிட்டளவு தினமுமுண்டுவர ஆண்மை அதிகரிக்கும்
தூதுவேளை பூவையுலர்த்திப் பொடித்து அரைதேகரண்டி தினம் காலை,பாலில் சாப்பிட்டுவர ஆண்மை பெருக்கும்
அரைக்கீரையை நெய்,மிளகு சேர்த்து வதக்கிச் சாப்பிட்டுவர தாது பலம் அதிகரிக்கும்
முருங்கைவிதைசூரணம் இரவில் பாலுடன் சாப்பிட்டுவர சுக்கிலம் விருத்தியாகும்.
தோல் நீக்கிய முருங்கை விதையை பாலில் வேகவைத்து,தேன் கலந்து இரவில் சாப்பிட்டுவர சுக்கிலம் விருத்தியாகும்
சுத்தம் செய்த ஆவாரை பிசின் 3கிராம்,100மிலி நீரில் இரவு ஊற வைத்து காலை பனங்கற்கண்டு கலந்து பருகிவர தாது விருத்தியடையும்
நன்னாரி வேர் குடிநீர் சூடாக பருகிவர ஆண்மை பெருகும்
பிரண்டைஉப்பு 2கிராம்,ஜாதிக்காய்தூள் 5கிராம் கலந்து சாப்பிட்டுவர தாதுநட்டம் குணமாகும்
செம்பரத்தை பூச்சூரணம் 10கிராம், மருதம்பட்டைச்சூரணம் 5கிராம் கலந்து பாலில் சாப்பிட்டுவர தாது பலம் பெறும்.ஆண் மலடு நீங்கும்
செம்பரத்தை மகரந்தக்காம்பு சூரணம் 5கிராம் பாலில் சாப்பிட்டுவர ஆண் மலடு நீங்கும்
செம்பரத்தைபூச்சூரணம்,முருங்கைபூ அல்லது விதைச்சூரணம் சேர்த்துச் சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்
சர்க்கரை வேம்பின் பாலை 48 நாள் வைத்திருந்து சாப்பிட நாதம் தூய்மையாகும். விந்து கட்டும்.பெண் மலடு நீங்கும்
ஓரிதழ்தாமரையை அரைத்து 10கிராம்,பாலில் பருகிவர ஆண்மை பெருகும். விந்து ஒழுக்கு நிற்கும்
ஓரிதழ்தாமரை சூரணம் 5கிராம் பாலில் பருக சுக்கிலம் பெருகும்.விந்திழப்பு தீரும்
தூதுவேளை இலை, அம்மான்பச்சரிசிஇலை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டுவர தாது, உடல் பலப்படும்
நாட்டு வெங்காயத்தை நெய்யில் வதககி உண்டுவர ஆண்மை அதிகரிக்கும்
அரசு விதைச்சூரணம் சாப்பிட்டுவர உயிரணுக்களை பெருக்கி ஆண்மலடு நீக்கும்
நிலப்பனங் கிழங்கினோடு நீர்முள்ளி வித்தும்கூட்டி, புலப்படும் நெருஞ்சி வித்திற் பூனைக்காலி விதையினோடு, இலப்படும் இவறறையிடித்து தூள்செய்து பாலில் கொண்டால் பலப்படும் விந்து என்று பேசினோர் பெரியோர்தாமே!
அம்மான்பச்சரிசி,கீழாநெல்லி இலைகள் சம அளவெடுத்து, எலுமிச்சை அளவரைத்து,200மிலி எருமைதயிரில் சாப்பிட்டுவர விந்துஒழுகுதல் கட்டுப்படும். உடம்புஎரிச்சல்,நமைச்சல்,மேகரணம் தீரும்
பிராய் பாலுடன் வறுத்த கடலைமாவைப் பிசைந்து, பட்டாணியளவு மாத்திரை செய்து காலைமாலை 2மாத்திரை சாப்பிட்டுவர ஆண்மை அதிகரிக்கும்
முருங்கைவிதை,பூனைக்காலிவிதை,நிலப்பனை,பூமிசர்க்கரைகிழங்கு சமன் பொடித்து,5கிராம்,5மிலி அத்திப்பாலில் காலைமாலை 20நாள் உட்கொள்ள அளவு கடந்த தாதுவளர்ச்சி தரும்
ஆலம்பழம்,விழுது,கொழுந்து சமனரைத்து,எலுமிச்சையளவு காலை 120நாள் உட்கொள்ள ஆண்மலடு நீங்கும்.
அமுக்கராசூரணம் 10கிராம்,கசகசா 30கிராம்,பாதாம்பருப்பு 10கிராம்.சாரபருப்பு 5கிராம் ஊறவைத்தரைத்து 200பாலில் சர்க்கரை சேர்த்து காலையில் பருகிவர தாது விருத்தியாகும்.இளமை திரும்பும்
எருக்கு இலையை அரைத்து,நெல்லிக்காயளவு,பாலில் கலந்து 48,96நாள் சாப்பிட ஆண்மலடு நீங்கும்
கீழாநெல்லி. ஓரிதழதாமரை சமனரைத்து, நெல்லிக்காயளவு, பாலில் மண்டலம் கொள்ள வாலிப வயோதிகம் நீங்கும்
கோரைக்கிழங்குசூரணம் அரைதேக்கரண்டி,தேனில் தினமிருவேளை கொள்ள புத்திக்கூர்மை,தாதுவிருத்தி,பசித்தீவனம்,உடற்பொலிவு உண்டாகும்
தாளிக்கீரை இலைகளை பருப்புடன் கூட்டாக சமைத்து நெய் சேர்த்துண்டு வர விந்திழப்பு தீரும்.தாது பலப்படும்
வெண்தாமரை பருப்பை தூள் செய்து நீடித்து சாப்பிட்டுவர ஆண்மை பெருக்கும்
மகிழவிதைப்பருப்பு 5கிராம்,பாலில் தினம் 4வேளை உட்கொள்ள தாது விருத்தியாகும்
விடத்தேர் பிசின் சூரணம் 3கிராம்,பாலில் கற்கண்டு சேர்த்து பருக தாது பலப்படும்
மகிழம்விதையை அரைத்து பாலிலுண்டுவர தாது விருத்தியாகும்
கானாவாழை சமூலம்,தூதுவேளைபூ,முருங்கைபூ சேர்த்து 2ல்1ன்றாய்க் காய்ச்சி பால்,கற்கண்டு கலந்து மண்டலம் கொள்ள தாது பலம் பெறும்
கருவேலம்பிசின் 2கிராம் நெய்யில் வறுத்துப் பொடித்து சாப்பிட்டுவர தாது பலம் பெறும்.
சந்தனம்,தேற்றான்விதை,பூமிசர்க்கரைகிழங்கு,பூனைகாலிவிதை,முருங்கைவேர்பட்டை வகைக்கு 2விராகனெடை எடுத்து தேங்காய்பாலிலரைத்து சீனிசர்க்கரை சேர்த்து தேங்காய்பாலுடன் 12நாள் 2வேளை சாப்பிட தாதுபலம் பெறும்.
ஆடுதீண்டாபாளைவிதை,பூமிசர்க்கரைவிதை,பூனைகாலிவிதை வகைக்கு 2 விராகன் அரைத்து பசுவின்பாலில் 12நாள் காலைமாலை கொள்ள தாது கட்டும்
எட்டிக்கொட்டையை அரைத்து குன்றிமணிஅளவு சாப்பிட்டு வர விந்து கட்டும்.
வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டு வர தாது விருத்தியடையும்
அரசமரத்தின் இலையை மைய அரைத்து காலை வெறும் வயிற்றில் 1-உருண்டை சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும்.நரம்பு தளர்ச்சி குணமடையும்
தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை அரை தேகரண்டி தேன் சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும
அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர, தாது விருத்தி உண்டாகும்.
உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வர தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.
துளசி வேரை நிழலில் உலர்த்தி இடித்து பொடித்து சாப்பிட்டு வர சொப்பன ஸ்கலிதம் இரண்டு நாளில் பலன் கிடைக்கும்
வால் முளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா சம அளவு அரைத்து நெய்யையும் சேர்த்து பதமாக வேகவைத்து தினம் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்
அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினம் 1 தேகரண்டி,200 மிலி பசும்பாலில் சாப்பிட தாது பலம் பெறும்.
கருவேலமரத்தின் பிசினை சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து பொடித்து சாப்பிட்டு வர தாது விருத்தியாகும்.
நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, முருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட தாது விருத்தியாகும்.
முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி 200மிலி பசும்பாலுடன் கலந்து குடித்து வர தாது விருத்தியாகும்.
0 Comments