இடுப்பு வலி ஏற்படக் காரணங்கள்:
நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டுஇ இடுப்புவலியால் அவதிப்படுவர். காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே அமர்ந்திருப்பதுதான்.
இருக்கையில் நேராக சரியான நிலையில் உட்காராமல் இருப்பது.
முறையற்ற உடற்பயிற்சி.
நீண்ட நேரம் அமர்ந்து பிரயாணம் செய்யும் போது இடுப்பு வலி ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது.
எலும்புகளில் ஏற்படும் சுண்ணாம்புக் குறைவு.
சரியாக குணப்படுத்தப் படாத வாயுக் கோளாறு.
நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வதால் இடுப்பு வலி எற்படும்
இடுப்பு வலி வரமால் தடுக்கும்
வழிமுறைகள்:
அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம்.
சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும்.
கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும்இ மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும்.
பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும்.
தினசரி உற்சாகமாக உடல் உழைப்புடன் இயங்க வேண்டும் அல்லது உடற் பயிற்சி செய்ய வேண்டும்.
நாற்காலியில் அமரும்போது முதுகுப் புறமும்இ இடுப்புப் பகுதியும் சாய்ந்திருக்குமாறு வசதியாக உட்காருங்கள்.
நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வது முதுகின் வளைவிற்குப் ஆபத்தை ஏற்படுத்தும்.
சேர்க்கவேண்டிய உணவுகள் :
உணவில் முடக்கத்தான் கீரை இஞ்சி புதினா பூண்டு போன்ற வாயு நீக்கும் உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும்.
வாயு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் தவிர்த்து விடுவது நல்லது.
கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும்.
வெள்ளைப் பூண்டு இடுப்புவலியை பெருமளவு குறைத்துவிடும்.
தவிர்க்கவேண்டிய உணவுகள் :
பகல் தூக்கம் மனக்கவலைகள் மன அழுத்தம் போன்ற நோய்கள் வரக்காரணமான வறுத்த உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
உருளைக் கிழங்கு பட்டாணி காராமணி வாழைக்காய் அதிக புளி குளிர் பானங்கள் ஆகியவற்றை இடுப்புவலி நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும்.
0 Comments